தமிழ்நாடு

புதுவை டிஜிபி தில்லிக்கு மாற்றம்

DIN


புதுவை மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா, தில்லிக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பாலாஜி ஸ்ரீவத்ஸவா புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.
புதுவை காவல் துறை டிஜிபியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரி நந்தா கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார். இவர், போக்குவரத்தை சீரமைப்பதிலும், சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தினார். குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தார். 
இவர் பதவி வகித்த நாள்களில் நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் என மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் இடம் பிடித்தது. இந்த நிலையில், இவர் தில்லிக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக மிúஸாரம் மாநில டிஜிபியாக பணியாற்றி வந்த பாலாஜி ஸ்ரீவஸ்தவா புதுவை மாநில புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது இடத்துக்கு அருணாச்சல பிரதேச டிஜிபி பி.கே. சிங் நியமிக்கப்பட்டார். 
இதற்கான உத்தரவை மத்திய சார்புச் செயலர் ராக்கேஷ் குமார் சிங் பிறப்பித்தார். புதுச்சேரி சட்டப் பேரவை சில நாள்களில் கூட உள்ள நிலையில், டிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT