தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்பி.வேலுமணி

DIN

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எழுப்பினார். 

அதில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்னைகள் தீர்க்க முடியாமல் உள்ளது. மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இனியாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்பி.வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. வார்டு வரையறைகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT