தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் கோவை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவையின் சின்னக் கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் 9 செ.மீ. மழையும், அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்ப உள்ளது.

நேற்று வரை நாடு முழுவதும் பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மழை சராசரி அளவைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT