தமிழ்நாடு

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்துக்கு ஏற்றதல்ல: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்

DIN


சென்னை: அணை பாதுகாப்பு மசோதா  தமிழகத்துக்கு ஏற்றதல்ல என்று கூறி, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சித்  தலைவர் மு.க. ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அணைகளை பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது.

அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும். அணைகளின் கட்டுப்பாட்டை கைப்பற்ற நினைப்பது கூட்டாட்சித் தத்துவத்தையே போட்டுத் தள்ளுவதாக இருக்கும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பதிவு செய்த கடும் எதிர்ப்பின் காரணமாகத்தான் மசோதா சட்டமாகவில்லை. பிற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும், மாநில அணை பாதுகாப்பு, அமைப்பின் கடுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் எனவும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT