தமிழ்நாடு

நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் சாரல் மழை பெய்ததையடுத்து அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடிஉயர்ந்து 55.85 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 2196.85 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 304.75 கன அடியாகவும் இருந்தது. அணையில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 78.94 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 50.60 அடியாக இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 41அடியாகவும், நீர்வரத்து 187 கன அடியாகவும் இருந்தது. அணையில் 2 மி.மீ. மழை  பதிவாகியிருந்தது.
ராமநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 54.75 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 96.74கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் 24.75 அடியாகவும், நீர்வரத்து 12 கன அடியாகவும் இருந்தது. அணையில் 29 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 17.50 அடியாகவும், நீர்வரத்து 8 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினார்கோயில் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 63 அடியாகவும், நீர்வரத்து 54 கனஅடியாகவும் இருந்தது. அணையில் 21 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT