தமிழ்நாடு

சந்திரயான்-2: விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

DIN


சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததையடுத்து, தமிழக மக்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை இன்று விண்ணில் ஏவியது நமது நாட்டின் பெருமை சார்ந்த விஷயம். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனையாகும்.

நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்குவதற்கான திறன் கொண்டுள்ள மிகக் குறிப்பிட்ட சில நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்ததற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனதார எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த சாதனையின் மூலம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு மாணவர்கள் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள்" என்றார்.

முன்னதாக, இன்று பிற்பகல் 2.43 மணியளவில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT