தமிழ்நாடு

ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூரில் பொது விடுமுறை

DIN


வேலூரில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மக்களவைத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ. சண்முகசுந்தரம் வெளியிட்டார்.

அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், அங்கு மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாததால் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், வேலூரில் தேர்தல் நடைபெறும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி, தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT