முகப்பு
தமிழ்நாடு

வாகனப் பதிவிற்கான பன்மடங்கு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: இ.கம்யூ கோரிக்கை 

வாகனப் பதிவிற்கான பன்மடங்கு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய  கம்யூயூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:39 AM
பகிர்:

சென்னை: வாகனப் பதிவிற்கான பன்மடங்கு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய  கம்யூயூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பதிவு செய்ய மற்றும் புதிப்பித்தலுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ட்டரியில் இயங்கும் வாகனங்கள் தற்போது அறிமுக நிலையில் தான் உள்ளது. இத்தகைய வாகனங்கள் முழு பயன்பாட்டிற்கு வரும் பொழுது, அதனால் மிகப்பெரும் பயன் கிடைக்கும் என்ற நிலை உருவானால், பொதுமக்கள் தாங்களாகவே பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதற்கு மாற்றாக பேட்டரி வாகங்களை வாங்குவதற்கு முன்வருவார்கள். பேட்டரி வாகனங்களை வாங்கும் பொது மக்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் சலுகைகளை அறிவித்து ஊக்குவிப்பது தவறல்ல.

ஆனால் பெட்ரோல் - டீசல் வாகனம் வாங்குவோர்களையும், பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களையும் தண்டிக்கும் விதமாக வாகனங்களை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் ரூ.1,000-ம் முதல் ரூ.20,000 வரை கட்டணத்தை உயர்த்துவது தண்டனை தருவதாகும். கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இத்தகையை நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →