சென்னை: ஞாயிறு காலை துவங்கி மதியம் 1 மணி வரை மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக காஞ்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் காஞ்சிபுரம் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
அந்த தரிசனத்தின் 28-வது நாளான இன்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிறு காலை துவங்கி மதியம் 1 மணி வரை மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக காஞ்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.