தமிழ்நாடு

பாரதியாருக்கு காவி நிறத் தலைப்பாகை: பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை 

DIN

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன்-3 ஆம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது.  இதுதொடர்பான படங்கள் பத்திரிகைகள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவின.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விபரம் வருமாறு:

அந்த அட்டைப் படத்தில் இருக்கும் பாரதியாரின் படம் தேசியக்கொடியின் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் எந்த ஒரு தவறான உள்நோக்கமும் இல்லை.

குறிப்பிட்ட அந்த  புத்தகத்தில் பாரதியாரைப் பற்றி ஒரு பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட எந்த ஒரு இடத்திலும் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்றோ, மத அடையாளங்களோடு கூடிய கருத்துக்களோ குறிப்பிடவில்லை. இதுகுறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT