தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

DIN


குற்றாலம் பகுதியில் சாரல் மழையின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்தது.
குற்றாலம் பகுதியில் இரு தினங்களாகப் பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் திங்கள் கிழமை தண்ணீர் வரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. 
அதைத் தொடர்ந்து, நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. 
சாரல் மழையின் அளவு குறைந்ததையடுத்து பேரருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். 
ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் தண்ணீர் விழுகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT