தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

DIN

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எச். வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார். அவரது  ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால் அதுகுறித்த தகவலை  தேர்தல் ஆணையத்தின் தமிழகப் பிரிவுக்கு தெரிவித்தார்.

பேரவைத் தலைவரின் தகவலானது, இந்திய தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதையடுத்து, நாங்குநேரி தொகுதிக்கு, வரும் டிசம்பருக்குள் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், இடைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT