தமிழ்நாடு

சென்னை அருகே காவலர் பொதுப் பள்ளி கட்டடம் அடிக்கல்

சென்னை அருகே மேலக்கோட்டையூரில் காவலர் பொதுப் பள்ளிக் கட்டடத்துக்கு  தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக  முதல்வர் எடப்பாடி 

DIN


சென்னை அருகே மேலக்கோட்டையூரில் காவலர் பொதுப் பள்ளிக் கட்டடத்துக்கு  தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். 
 இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: 
கோவை மாவட்டம் கோவைப்புதூரில் சிறப்பு காவல் 4-ஆம் அணிக்காக 137 காவலர் குடியிருப்புகளையும், பெரம்பலூர் துரைமங்கலத்தில் 76 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் சிறப்பு காவல் 9-ஆம் அணிக்காக 48 குடியிருப்புகள் என 124 காவலர் குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 
இதேபோன்று, சென்னையில் சிட்லபாக்கம், திருமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் 4 காவல் நிலையங்கள், காஞ்சிபுரத்தில் புலனாய்வுத்துறை பிரிவு அலுவலகக் கட்டடம், சேலம் அன்னதானபட்டியில் ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், வேலூர் அரக்கோணத்தில் துணைக்காவல் 
கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீயணைப்புப் பிரிவுக்கான 13 குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்தார்.
காவலர் பொதுப்பள்ளி: சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அங்குள்ள காவல் துறை பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு காவலர் பொதுப் பள்ளி நிறுவ தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டடத்துக்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி நாட்டினார்.
ஆண்டுமலர் வெளியீடு: கடந்த ஆண்டில் காவல் துறை கையாண்ட வழக்குகள், சிறப்பு வழக்குகள் குறித்த செய்திகளைத் தொகுத்து ஆண்டுமலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய திட்டத்துக்கு அடிக்கல்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம், அவசர கட்டுப்பாட்டு மையம் ஆகியன கட்டப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த கட்டடத்துக்கும் முதல்வர் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். 
இதேபோன்று, வருவாய்த் துறையின் கீழ் வரும் 101 நில அளவர், 157 வரைவாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான பணிநியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார்.
வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்: தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், சிங்கம்புணரி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஆகிய இடங்களில் 
கட்டப்பட்ட அலுவலகக் கட்டடங்கள், வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT