தமிழ்நாடு

திருச்சி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதிக்கு காரணம் யார் தெரியுமா?

DIN


திருச்சி: கடந்த செவ்வாயன்று திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.

அதற்குக் காரணம் பிஎஸ்என்எல் நிர்வாகம் மட்டுமல்ல. மின்சார வாரியமும்தான். 

கடந்த 6 மாதங்களாக பிஎஸ்என்எல் நிர்வாகம், மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை பாக்கி வைத்திருந்ததால், கடந்த செவ்வாயன்று மின்சார வாரியம் மணப்பாறை அருகே உள்ள அனியப்பூரில் இருந்த பிஎஸ்என்எல் டவருக்கு மின் சேவையைத் துண்டித்தது.

மணப்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் டவர்களுக்கு இதுவரையிலான மின் பாக்கி ரூ.4.7 லட்சம். எனினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து டவர்களுக்கும் மின் சேவையை துண்டிக்காமல் மின் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி ஒரே ஒரு டவருக்கான மின் சேவை மட்டுமே தாற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து முறையாக பணம் ஒதுக்கீடு செய்யப்படாததே மின் கட்டண பாக்கிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஜூன் 30ம் தேதிக்குள் அனைத்து பாக்கிகளும் செலுத்தப்பட வேண்டும் என்று மின்சார வாரியம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT