தமிழ்நாடு

தினமும் இதைச் சொல்லக் கஷ்டமாகத்தான் இருக்கிறது: வேறென்ன செய்ய?

DIN


சென்னை: இன்று 10 மாவட்டங்களில் கோடை வெப்பம் சதமடித்தது, 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகும், பகல் வேளையில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தினமும் ஊடகங்கள் சொல்லி வருகின்றன. 

வழக்கம் போலத்தான், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை விட அதிகரித்துக் காணப்படும் என்பதுதான் இன்றைய செய்தியும்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது என்னவென்றால், குஜராத்தை யு டர்ன் அடித்து வந்து தாக்க முயன்ற வாயு புயல், மேகக் கூட்டங்கள் கூட இல்லாமல், பலவீனமான நிலையில் கரையைக் கடந்துள்ளது. பலமான வாயு புயல், கரையைக் கடக்க சில மணி நேரத்துக்கு முன்பு பலவீனமடைந்துள்ளது.

சென்னை வழக்கம் போல 40 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையே இன்றும் காணும். புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளும், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் 40+ டிகிரி செல்சியஸ் அளவிலேயே வெப்பநிலை நீடிக்கிறது.

ஜூன் 20ம் தேதிக்குப் பிறகுதான் தமிழகத்தில் சென்னை உட்பட பிற மாவட்டங்களிலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் வெப்பம் சற்று தணியும் என்று தெரிவித்துள்ளார்.

தினமும் இதையேதானே சொல்கிறீர்கள் என்று மக்கள் புலம்புவது கேட்கிறது. ஆனால் சொல்லாமல் வேறென்ன செய்ய?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT