தமிழ்நாடு

ஒரே தேர்தல்: பாஜக தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது: கே.வீ.தங்கபாலு

DIN


ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தனது 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறியது:
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும். அவர் நல்ல எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படுவார். 
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, பல்வேறு யுக்திகளைக் கையாண்டு பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தேர்தல் முறையில் சந்தேகம் இருந்து வருகிறது.
 ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்தை அறிந்துதான் அதற்கேற்பதான் முடிவு எடுக்க வேண்டும். பாஜக தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக முன்வர வேண்டும். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சத்தியமூர்த்தி பவனில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.  மூத்த தலைவர்கள் குமரி அனந்தன்,  மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT