தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று லேசான தூறல் போட்டது. மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, படிப்படியாக இந்தியா முழுவதும் மழை பெய்யும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று வரை சென்னையில் அனல் காற்று வீசி வந்ததால் மக்கள் கடுமையாக தவித்துப் போயினர். இந்த நிலையில், இன்று சென்னையில் பரவலாக லேசான தூறல் போட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT