தமிழ்நாடு

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN


வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 26) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: 
பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...: சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
7 இடங்களில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை தெற்கில் 104 டிகிரி, தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி, கரூர்பரமத்தி, திருத்தணியில் தலா 100 டிகிரி வெப்பநிலைபதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT