தமிழ்நாடு

 சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

தினமணி

வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அயோத்தி - ராமேசுவரம் சாரதா சேது விரைவு ரயில் சிவகங்கை, காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். காரைக்குடியிலிருந்து திருவாரூருக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 30 வரை இயக்கப்படும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும். சென்னை - ராமேசுவரம் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். ராமேசுவரம்-அஜ்மீர் செல்லும் விரைவு ரயில் காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையில் புறப்படும் நேரத்தை இரவு 8.30 ஆக மாற்ற வேண்டும்.
ராமேசுவரம்-கோவை விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா பகல் நேர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். திருச்சி - ஹவுரா வாராந்திர விரைவு ரயிலை காரைக்குடி வரையிலும், சென்னை -காரைக்குடி பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை வரையிலும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். 
சென்னையிலிருந்து ராமேசுவரத்திற்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருச்சியிலிருந்து மானாமதுரைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருவாரூரிலிருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்குப் பயணிகள் புதிய ரயில் இயக்க வேண்டும். திருச்சி முதல் மானாமதுரை வரை உள்ள வழித்தடத்தை மின்வழிப் பாதையாக மாற்ற வேண்டும். சென்னை-நெல்லை விரைவு ரயிலை முந்தைய வழித்தடமான திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT