தமிழ்நாடு

பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி: அமைச்சர் அன்பழகன்

DIN


சென்னை: பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.15,000 வரை கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை அமைச்சர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

மாணவர் சேர்க்கை இல்லாததால் 15 பொறியியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையே வேண்டாம் என்று கூறிவிட்டன. ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரியை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT