ஒவ்வொரு பருவ காலத்திலும் சென்னையின் வானிலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேனின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பார்கள்.
அந்த வகையில் வரும் ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஜூன் மாதத்தை விட, நிச்சயம் ஜூலை மாதம் இரண்டு மடங்கு மழையைப் பெறும். இது மெது மெதுவாக அதிகரிக்கும். தென் மேற்குப் பருவ மழை நிச்சயம் சென்னையை கைவிடாது. ஆனால் அதற்காக இந்த மழையால் ஏரிகளில் நீர்மட்டம் உயரப் போவதில்லை. ஆனால் நிச்சயம் மழை நீர் சேகரிப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறலாம். ஜூன் மாதம் கிட்டத்தட்ட சென்னையில் 50 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் சென்னை பெறும் சராசரி மழையின் அளவு 430 மி.மீ. தான். இதே போல ஜூன் முதல் செப்டம்பர் வரை சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக பெய்த மழையின் அளவைக் கீழேக் காணலாம்.
2010 - 666 மி.மீ.
2011 - 853 மி.மீ.
2012 - 441 மி.மீ.
2013 - 616 மி.மீ.
2014 - 519 மி.மீ.
2015 - 406 மி.மீ.
2016 - 526 மி.மீ.
2017 - 508 மி.மீ.
2018 - 432 மி.மீ.
2019 - 45 மி.மீ. (ஜூன் 1ம் தேதி முதல் இன்று காலை வரை)
எனவே, இதன் மூலம் பெரும்பாலான காலக்கட்டங்களில் சென்னைக்கு தென்மேற்குப் பருவ மழையை விட வெப்பச் சலனத்தால் பெய்த மழையின் அளவு 400 மி.மீ.ஐ விட அதிகமாகவே இருந்துள்ளது.
வழக்கம் போல வரும் ஜூலை மாதம் இடி மின்னலுடன் கூடிய இடைவெளியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ள மாதமாகவேக் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.