தமிழ்நாடு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்: உடன்பாடு கையெழுத்து

DIN


சென்னை: திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் திருமாவளவனும், மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டு பரஸ்பரம் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனர்.

இதுவரை திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொமதே கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT