தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

DIN

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு பத்து தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தொகுதிகளை அடையாளம் கண்டு தேர்தல் பணிகளை துரிதப்படுத்த இரு கட்சிகளும் ஆர்வமாக உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT