ஊழல், லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனை: நீதிமன்றம் யோசனை
தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தனது யோசனையை அளித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் சான்றிதழ் பெற வந்தால், அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.