தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக சிறப்பு நீதிமன்றம்: கனிமொழி எம்.பி

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம்  பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார்  உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடபிருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.ம் என்று கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல் பின்வருமாறு:

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

வைகோ தலைவராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்!மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! மல்லை சத்யா பேட்டி

SCROLL FOR NEXT