தமிழ்நாடு

கனிம வளங்கள் திருட்டு:  ஆய்வுக்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஆணை

DIN


தமிழகத்தில் உள்ள சட்டவிரோத குவாரிகள், விதிமுறைகளை மீறி திருடப்பட்ட கனிம வளங்கள் ஆகியவற்றை கண்டறிய  ட்ரோன்களின் (ஆளில்லா விமானம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் இயங்கி வருகின்றன. 
இதன் மூலம் கனிம வளங்கள் முற்றிலுமாக திருடப்பட்டு வருகின்றன. எனவே, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கவும், சட்டவிரோதமாக குவாரிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. 
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 
இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், சட்டவிரோத குவாரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசிடம் தற்போது செயற்கைக்கோள் உதவியுடன் ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார். 
அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தால் சட்ட விரோத குவாரிகளைக் கண்டறிய முடியும். 
எவ்வளவு கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து அளவிட முடியாது. 
ஆனால், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் திருடப்பட்டுள்ள கனிம வளத்தின் அளவைக் கணக்கிட முடியும். எனவே,  இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி சட்டவிரோத குவாரிகள், திருடப்பட்ட கனிம வளங்களின் அளவு குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT