தமிழ்நாடு

ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் மறைவு: தமிழிசை இரங்கல் 

DIN

சென்னை: மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார் மறைவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் சித்தப்பாவும், ஜி.கே.மூப்பனார் அவர்களின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் த.மா.காவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

தேசிய குடும்பத்தில் வந்த அவரது பணி அரசியலையும் தாண்டி திருவையாறு ஸ்ரீ தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபை தலைவராகவும் அவர் ஆற்றிய கலை சேவை மற்றும் பொது நல சேவையும் போற்றுதற்குரியது. அவர் என்றும் நம் தேசிய நெஞ்சங்களில் வாழ்வார் .

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT