தமிழ்நாடு

இந்த அழகான வேட்பாளரை மக்களவைக்கு அனுப்ப மறக்காதீர்கள்: உதயநிதி ஸ்டாலின்

DIN


திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், இந்த அழகான வேட்பாளரை மக்களவைக்கு அனுப்ப தவறாதீர்கள் என்றார். 

கட்சியின் தென் சென்னை தேர்தல் அலுவலகத்தை திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், 

"தென் சென்னை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த அழகான வேட்பாளரை உங்கள் பிரதிநிதியாக மக்களவைக்கு அனுப்பிவைக்க தவறாதீர்கள். நான் அழகு என்று குறிப்பிட்டது அவரது தோற்றத்தை அல்ல. தமிழ் மீது அவர் கொண்டுள்ள அன்பு, கட்சி தலைமை மீது கொண்டுள்ள பற்று, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மற்றும் திமுக கொள்கை மீது கொண்டுள்ள கொள்கை பிடிப்பு ஆகியவற்றை தான் அழகு என்று குறிப்பிட்டேன். 

எங்கள் இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் உறவு 3 தலைமுறைகளாக நீடித்து வரும் உறவு" என்றார்.  

திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மறைந்த திமுக தலைவர் தங்கபாண்டியனின் மகள் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT