தமிழ்நாடு

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்கு ஆதரவா?: கமல் விளக்கம்

DIN


மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் காங்கிரஸை ஆதரிக்குமா, பாஜகவை ஆதரிக்குமா என்பதற்கு அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கமல் கூறியது:
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் கோவையில் மார்ச் 24-ஆம் தேதி வெளியிடப்படும். அதில் சில முக்கிய பெயர்களும் இடம்பெறும். தேர்தல் அறிக்கையும், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் மார்ச் 24-ஆம் தேதியே அறிவிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிக்கப்படும். குடிநீர் தொடங்கி, மருத்துவ வசதி உள்பட மக்களுக்குத் தேவையான விஷயங்கள் இடம்பெறும்.
திமுக - அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் என்னைச் சின்ன வயதிலேயே ஈர்த்த வாக்குறுதிகள்தான். அதே வாக்குறுதிகளைத்தான் இப்போதும் கூறுகின்றனர். அதை நிறைவேற்றுவதுதான் முக்கியம். மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விஷயத்தை  இரண்டு கட்டமாகப் பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன் என்றார்.
தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் காங்கிஸை ஆதரிக்குமா, பாஜகவை ஆதரிக்குமா என்று கேட்டபோது,  ஆதரவை யாருக்கு கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யும் பலம் எங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்போதே நாங்கள் தேர்தலில் பங்குபெற்றுள்ளோம்.
 தேர்தலில் போட்டியிட நான் அஞ்சவில்லை. அந்தப் பயமெல்லாம் இருந்தால் கட்சியே தொடங்கியிருக்க மாட்டேன். பயப்படும் நேரமெல்லாம் தாண்டிவிட்டது என்றார் கமல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT