தமிழ்நாடு

100% வாக்குப் பதிவு: பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி ஆணையர்!

DIN

மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. அவற்றில் குறிப்பாக, மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கோ.பிரகாஷ்  பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
வரும் மக்களவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 3  தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் பெரம்பூர் தொகுதியிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, திருவான்மியூர்  மருந்தீஸ்வரர் ஆலயம் முதல் பாலவாக்கம் கடற்கரை வரை  மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில், 350 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும், வாக்கு ஒப்புகைச் சீட்டு சாதனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், பாலவாக்கம் கடற்கரை பகுதியில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பாராசூட் மூலம் பறந்து சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருடன், முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 10 பேரும் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான மதுசுதன் ரெட்டி,  தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT