தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலோடு மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

DIN


சேலம்: மக்களவைத் தேர்தலோடு பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின். 

திமுகவின் தோ்தல் அறிக்கைதான் ஹீரோ. அதைப் பாா்த்து எல்லோரும் பயப்படுகிறறாா்கள் என நடிகா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தாா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணிக்கு ஆதரவாக சேலம் உடையாப்பட்டி பகுதியில் நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பேசுகையில், 

கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது வராத மோடி, தற்போது ஓட்டுக்காக தமிழகத்துக்கு 4 முறை வந்து சென்றுள்ளார். ஓட்டுக்காக மக்களை சந்திக்கும் மோடியை, இந்த மக்களவைத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஹீரோவான திமுகவின் தோ்தல் அறிக்கையை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். தோ்தல் ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார். அவர் தான் பிரதமர் மோடி. 

திமுக வெற்றி பெற்றறால் விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமக, தேமுதிக கட்சிகள் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சியினர் ஓட்டு கேட்டு மக்களிடம் வந்தால் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றார் உதயநிதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT