தமிழ்நாடு

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் மீது வழக்கு

DIN

தேவர் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக, மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளரான சு.வெங்கடேசன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ச. நடராஜனிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக, இவர் கூட்டணிக் கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இது குறித்து, மதுரை தெற்கு தொகுதி  தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் தங்கமீனா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக, சு. வெங்கடேசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT