தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்

DIN

திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப்பெருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்ச்சியை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு உற்சவர் சன்னதியிலிருந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க அங்கி அலங்காரத்தில் சுவாமி தெய்வானையுடன் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் 5.45 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
காலை 6.25 மணிக்கு முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வெள்ளை வீச, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கிரிவலப் பாதையில் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
 தேரின் முன் சிறிய சட்டத் தேரில் விநாயகர் முன்னே செல்ல, பின்னே சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட 5 அடுக்குகளில் உருவான பெரிய தேரில் கிரிவலப்பாதையில் எழுந்தருளினார்.   தேர் 10.50 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.
 விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT