தமிழ்நாடு

நயன்தாரா விவகாரம்: திமுகவிலிருந்து ராதாரவி இடைநீக்கம்

DIN


நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசியதாக நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கொலையுதிர் காலம் திரைப்பட நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
நடிகர் ராதாரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது:  பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்துக்குரியது. 
திமுகவினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT