தமிழ்நாடு

உள்தமிழகத்தில் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

உள் தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 28) 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


உள் தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 28) 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: 
தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை  வறண்ட வானிலை நிலவும். உள் தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 28) 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. அதாவது, வழக்கத்தைவிட  2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.   குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய  மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. 
சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக  இருக்கும். அதிகபட்சமாக  95 டிகிரி பாரன்ஹீட்  வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 9  இடங்களில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக கரூர்பரமத்தி, திருத்தணியில் தலா 102 டிகிரி  வெப்பநிலை பதிவானது. தருமபுரி, நாமக்கல், சேலம், வேலூரில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. கோயம்புத்தூர் விமான நிலையம், மதுரை விமானநிலையம், திருச்சியில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT