தமிழ்நாடு

குமரியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

DIN

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
 கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சுற்றுலா சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருந்தனர். முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சூரிய அஸ்தமன பூங்கா, வட்டக்கோட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
 மாலையில் சூரிய அஸ்தமனம் பார்க்க ஏராளமானோர் குவிந்ததால் விவேகானந்தபுரம் முதல் காந்தி மண்டபம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 திற்பரப்பு அருவியில்...
 பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.
 குறிப்பாக, திற்பரப்பு அருவியில் தற்போது மிதமாக தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இதமாக நீராட முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவியே திணறும் வகையில் பயணிகள் கூட்டம் இருந்தது.
 மற்றொரு சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தின் மீது நடந்து அதன் பிரம்மாண்டத்தையும், இப்பகுதியிலுள்ள இயற்கை அழகையும் சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். சிலர் பாலத்தின் கீழ்பகுதியில் பாயும் பரளியாற்றில் நீராடி மகிழ்ந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT