தமிழ்நாடு

கோடை விடுமுறை: ஊசிமலை காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

கோடை விடுமுறையை முன்னிட்டு கூடலூர் பகுதியிலுள்ள ஊசிமலை காட்சி முனையைக் கண்டு களிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
 நீலகிரி மாவட்டம், கூடலூர் - உதகை சாலையிலுள்ள ஊசிமலை காட்சி முனை உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காட்சிமுனையிலிருந்து பார்த்தால் கூடலூர் நகரம், அதன் சுற்றுப்புற பகுதிகள், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆகியவற்றை ஒருசேரக் காண முடியும்.
 இப்பகுதி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதால் கேரளம், தென் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சிமுனைக்குச்சென்று இயற்கை அழகைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்வது வழக்கம். தற்போது கோடை தொடர் விடுமுறை காரணமாக ஊசிமலை காட்சிமுனைப் பகுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT