தமிழ்நாடு

கத்திரி வெயில்: காலை 8.30 மணிக்கே 100 டிகிரி வெயிலை சந்தித்த 12 நகரங்கள்

ஏப்ரல் மாதம் முதல் தமிழக மக்கள் மீது மசாலா தடவிக் கொண்டிருந்த கோடை வெயிலானது மே 4ம் தேதி முதல் வறுத்தெடுக்கத் தொடங்கியது.

DIN


சென்னை: ஏப்ரல் மாதம் முதல் தமிழக மக்கள் மீது மசாலா தடவிக் கொண்டிருந்த கோடை வெயிலானது மே 4ம் தேதி முதல் வறுத்தெடுக்கத் தொடங்கியது.

அதாவது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் கடுமையான அனல் காற்றுடன் கோடை வெயில் தகித்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் படிப்படியாக வெப்பம் உயர்ந்து வந்த நிலையில், இன்று தமிழகத்தில் 12 நகரங்களில் காலை 8.30 மணிக்கே வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை சந்தித்துள்ளது.

பொதுவாகவே முற்பகலுக்குப் பிறகு தான் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்படும். ஆனால் இனி வரும்நாட்கள் அரபு நாடுகளைப் போல ஆகிவிடுமோ என்ற ஒரு அச்சத்தை இன்று தமிழக மக்கள் நிச்சயம் அடைந்திருப்பார்கள்.

அந்த வகையில் தமிழகத்தில இன்று காலை 8.30 மணிக்கே 12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் - 110 டிகிரி ஃபாரன்ஹீட் 
திருச்சி - 108 டிகிரி ஃபாரன்ஹீட்
திருத்தணி - 108 டிகிரி ஃபாரன்ஹீட்
தஞ்சாவூர்  - 105.8 டிகிரி ஃபாரன்ஹீட்
நெல்லை - 105.44 டிகிரி ஃபாரன்ஹீட்
மதுரை - 105.8 டிகிரி ஃபாரன்ஹீட்
சென்னை விமான நிலையம் - 102.8 டிகிரி ஃபாரன்ஹீட்
பரங்கிப்பேட்டை  - 101.66 டிகிரி ஃபாரன்ஹீட்
சேலம் - 103.28  டிகிரி ஃபாரன்ஹீட்
நாமக்கல் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என காலையிலேயே வெப்பம் கொளுத்தத் தொடங்கியதால் மக்கள் இந்த கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT