தமிழ்நாடு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் முதல்வர் இன்று பிரசாரம்

DIN


ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி 
கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்கிறார். முதல்வர் வருகை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் பெ. மோகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மே 7) ஏழு  இடங்களில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை அதிமுக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர்கள் ஆர். காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ. ராஜு,  ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், மணிகண்டன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. சண்முகநாதன், சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலர் என். சின்னத்துரை, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி வேட்பாளர் பெ. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறியது:  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, 5.40 மணிக்கு புதியம்புத்தூரிலும், 6.20 மணிக்கு தருவைகுளத்திலும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், 8 மணிக்கு முத்தம்மாள் காலனியிலும், 8.45 மணிக்கு முத்தையாபுரத்திலும் பேசிவிட்டு இரவு  9.20 மணிக்கு  புதுக்கோட்டையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மே 12-ஆம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரசாரம் செய்கிறார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT