தமிழ்நாடு

நீட் தேர்வினால் சாமானிய குழந்தைகள் கூட மருத்துவர் ஆகலாம்: தமிழிசை பேட்டி

நீட் தேர்வினால் சாமானிய குழந்தைகள் கூட மருத்துவர் ஆகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

DIN


நீட் தேர்வினால் சாமானிய குழந்தைகள் கூட மருத்துவர் ஆகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தில்லியில் இன்று சென்னை வந்த தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், தில்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மக்கள் வாழ கூடிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தோம். அங்கு பாஜகவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு நம்பிக்கையை கூட்டி இருக்கிறது. சாதாரண மக்கள் கூட தேர்வு எழுதி மருத்துவர் ஆகலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக வேட்பாளர்கள் யாரும் நீட்டை ஆதரிகமாட்டார்கள் ஏனென்றல் அனைவரும் தனியார் மருத்துவ கல்லூரியின் தாளாளர்கள். பொதுமக்களுக்கு நீட்டை பற்றி தவறான எண்ணத்தை பதிவு செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லாமல் எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாக காங்கிரஸ் மற்றும் திமுகவால் நீட்டை எடுக்க முடியாது. ஏனென்றால் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. 

"நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், அது நீட்டினால் தான் என்பது சரியாகாது. எந்த திட்டத்திலும் உயிரிழப்புகள் இருக்கக்கூடாது. 

ஊழலினால் ஆட்சியை இழந்தவர்கள் காங்கிரஸ் அவர்கள் இன்னும் ஊழல் வழக்கிலிருந்து வெளிவரவில்லை. ராகுல் ஓட்டுக்காக பொய் சொல்கிறார். உச்சநீதிமன்றத்தில் நான் பொய் சொன்னேன் என்று சொல்வது போல டுவிட்டரில் கூறியது ஒரு பொய்யாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்திய ஏவியிருக்கும் செயற்கைக்கோள் மூலம் ஃபானி புயலை கண்டறிந்து உயிரிழப்புகள் தடுக்க பட்டிருக்கிறது. இதனை ஐ.நா பாராட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் மீது மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அதிக அக்கறை இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி குறித்து பேச காங்கிரசிற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

மக்களவைத் தேர்தலின் முடிவு பாஜகவிற்கு சாதகமாக இருந்தால் தான் மக்களுக்கும் சாதகமாக இருக்கும்.

பிரசாரத்தின் போது தாக்கப்படுவது தவறுதான். அரவிந்த் கேஜரிவால் ஆட்சியில் அவருக்கே பாதுகாப்பில்லை அவர் மக்களை எப்படி பாதுகாப்பார் என்று சிந்திக்க செய்யவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

என் நடிப்பின் மீது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

SCROLL FOR NEXT