தமிழ்நாடு

பஞ்சவடியில் வெங்கடாசலபதி சிலை: மே 10-ஆம் தேதி பிரதிஷ்டை

DIN


புதுச்சேரி அருகே அமைந்துள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில், வருகிற 10-ஆம் தேதி வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 
இது குறித்து பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலை நிர்வகித்து வரும் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா அறக்கட்டளைத் தலைவர் எம்.கோதண்டராமன் கூறியது: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், பட்டாபிஷேக கோலத்தில் ராமர், ஸ்ரீ மகா கணபதி, திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரது சிலைகள் உள்ளன. இதனோடு திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தின் சார்பாக வந்திருக்கும் ஏழரை அடி வெங்கடாசலபதி சிலையானது மே 10-ஆம் தேதி காலை 6.30 முதல் 8.30 மணிக்குள் ஆஞ்சநேயருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி ஸ்ரீமான் வெங்கடேச பட்டாச்சாரியார், பிரதிஷ்டை செய்து வைக்க உள்ளார். தொடர்ந்து வெங்கடாசலபதிக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, ஜுன் 23-ஆம் தேதி, எஸ்.ரமணி தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
இதற்காக புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தமும், 106 வைணவ தலத்தில் இருந்து மாலைகள், பிரசாதங்கள் ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. இந்த கும்பாபிஷேகத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்காக திண்டிவனம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து இலவச பேருந்து வசதியும், பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில் பஞ்சவடி ஆஞ்சநேயர் உருவப் படச்சுருள் வெளியிடப்பட்டது. இதில் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா அறக்கட்டளைப் பொருளாளர் வி.கச்சபேஸ்வரன், தலைவர் எம்.கோதண்டராமன், ஆன்மீக சொற்பொழிவாளர் தமால் எஸ்.ராமகிருஷ்ணன், செயலர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT