தமிழ்நாடு

பிங்க் நிற டி-ஷர்ட், போகுமிடமெல்லாம் செல்ஃபி: அரசியல் பாதையில் இது புது ரூட்

பொதுவாகவே தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் எல்லாம் மக்களை நோக்கி செல்வது வழக்கம்தான். 

DIN


பொதுவாகவே தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் எல்லாம் மக்களை நோக்கி செல்வது வழக்கம்தான். 

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும், இடைத்தேர்தல்தானே என்று நின்றுவிடாமல் மக்களை நோக்கியப் பயணத்தை நிறுத்தவில்லை இவர். முதல்வர் கனவோடு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் மு.க. ஸ்டாலின் தான் அவர்.

கிராமங்களை நோக்கிய தனது பயணத்தை மிக இயல்பானதாக மாற்றியிருக்கும் ஸ்டாலினை, ஒரு அரசியல் தலைவர் போன்ற பாசாங்கு இன்றி சாதாரண டி-ஷர்ட்டுடன் பார்க்க முடிகிறது. பொதுமக்கள் அதிகம் இருக்கும் சந்தை போன்ற இடங்களுக்கு நடந்து சென்று வருகிறார். அப்போது செல்ஃபிகளுக்கும் அவர் நோ சொல்வதில்லை. செல்ஃபி எடுக்கத் தெரியாதவர்களுக்கு அவரே செல்போனில் செல்ஃபி எடுத்துத் தருகிறார்.

கிராமங்களில் தனக்கென நாற்காலி தேடாமல் திண்ணைகளில் அமர்ந்து மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறார்.

கைகுலுக்கி, நலம் விசாரித்து மறுபக்கம் திமுகவுக்கு வாக்கு சேகரித்து வரும் ஸ்டாலினின் புதிய பாதை மக்களை கவருமா? தேர்தல் முடிவுகளே பதில் சொல்லும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT