தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு: 18 பேருக்கு வீடு கட்டித் தந்த ராகவா லாரன்ஸ்

DIN


திருக்குவளை அருகே கச்சநகரம்- செரநல்லூரில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 18 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் பெரும்பாலானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய 
நடிகர் ராகவா லாரன்ஸ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். அதன்படி, ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இலவசமாக ஒப்படைக்கப்பட்டன.
 திருக்குவளை அருகேயுள்ள கச்சநகரம்- செரநல்லூரில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்காக கட்டப்பட்ட 18 வீடுகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் திங்கள்கிழமை ஒப்படைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கிய அவர், பொதுமக்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT