தமிழ்நாடு

அமைச்சர் மீது நடவடிக்கை: விசிக வலியுறுத்தல்

கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

DIN


கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். இந்த வன்முறை பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதோடு,  கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உண்மையைப் பேசிய கமல்ஹாசனைப் பாராட்டுகிறோம். ஆனால் தேர்தல் பரப்புரையின் போது மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது  ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT