தமிழ்நாடு

குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பலி

DIN


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் வசிப்பவர் ராஜி (60). வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (52). இவர்களுக்கு கோவர்த்தனன் (30), கௌதமன் (27) ஆகிய இரு மகன்கள். கோவர்த்தனனுக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி உள்ளார்.
கோவர்த்தனன் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் வீட்டின் ஓர் அறையிலும், ராஜி உள்ளிட்ட மற்ற மூவரும் குளிர்சாதனப் பெட்டி (ஏ.சி.) பொருத்தப்பட்ட வேறொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அறை முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதில் மூச்சுத் திணறி மயங்கிய ராஜி, கலைச்செல்வி, கௌதமன் ஆகிய மூவரும் தீயில் உடல் கருகி பலியாகினர். அலறல் சப்தம் கேட்டு, பக்கத்து அறையிலிருந்து கோவர்த்தனன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்புப் படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். உயிரிழந்த கௌதமனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT