தமிழ்நாடு

மே 20-இல் கமல் மீதான முன்ஜாமீன் தீர்ப்பு

DIN


மதுரை:  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கில் மே 20-இல் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மே 12-இல் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' எனப் பேசினார். இந்தப் பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் கமல்ஹாசன் மீது மத கலவரத்தை தூண்டு வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது. விடுமுறை கால அமர்வில் அவசர கால வழக்காக விசாரிக்க முடியாது, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என நீதிபதி பி. புகழேந்தி தெரிவித்தார். இதையடுத்து, புதன்கிழமை மாலை, கமல்ஹாசன் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு, நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சியினரோ விவாதிக்கக் கூடாது என தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.  

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய மனு மீது மே 20 -ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT