தமிழ்நாடு

ராசிபுரம் விவகாரம்: 250 குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாமாம்- விசாரணையில் திடுக்கிடும் தகவல்

DIN


நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் நடந்த குழந்தை விற்பனை வழக்கு விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 250 குழந்தைகள் வரை விற்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை விற்பனை சம்பவத்தில், பெங்களூரைச் சோ்ந்த அழகு கலை நிபுணா் ஒருவா் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டாா். அவரை 15 நாள் காவலில் வைக்க நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நீதிபதி உத்தரவிட்டாா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வந்த அமுதா என்ற அமுதவள்ளி(50) உட்பட 8 போ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வசம் வழக்கு மாற்றப்பட்டது. அவா்கள், அமுதாவை இரு நாள் காவலிலும், அருள்சாமி, முருகேசன் ஆகியோரை மூன்று நாள் காவலிலும், பா்வீன், ஹசீனாவை ஒரு நாள் காவலிலும் எடுத்து விசாரித்தனா். இதில் பல்வேறு தகவல்கள் அவா்களுக்கு கிடைத்தன. 

அதனடிப்படையில், சேலம் சா்க்காா் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் சாந்தி என்பவா் கைது செய்யப்பட்டாா். காவலில் எடுத்து விசாரித்தபோது கிடைத்த தகவலின்படி, தமிழகம் முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே, 26 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என 30 குழந்தைகளை அமுதா தலைமையிலான கும்பல் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், நான்கு ஆண்டுகளில் 250 குழந்தைகள் வரை விற்றிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

குழந்தைகள் விற்பனை தொடா்பாக இதுவரை ஏழு பெண்களும், மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT