தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கும்? பள்ளிக் கல்வித் துறை தகவல்

DIN


சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விலையில்லா பாடநூல்கள் தங்களது தேவை பட்டியலின் படி பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும், 2,3,4,5,7,8,10,12ம்  வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட நூல்களை 2019 - 20 ம் கல்வியாண்டில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT