தமிழ்நாடு

தமிழகத்தில் பதிவான 'நோட்டா' வாக்கு எவ்வளவு தெரியுமா?

DIN

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39-ல் 38 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. அதுபோன்று அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தானதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன.

இதில் 38 இடங்களில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிமுக கூட்டணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறி நோட்டாவில் தங்கள் வாக்கைப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது பதிவான மொத்த வாக்கு சதவீதத்தில் 1.8 சதவீதமாகும். 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 822 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT