தமிழ்நாடு

13 திமுக எம்எல்ஏக்கள் 28-ஆம் தேதி பதவியேற்பு

DIN

2019 மக்களவைத் தேர்தலுடன் இணைந்து காலியாக உள்ள தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து பேரவையில் திமுகவுக்கு எண்ணிக்கை 101 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 13 பேரும் பதவியேற்கின்றனர். இவ்வாரு திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்த காரணத்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடருகிறது. 

இத்தேர்தல் முடிவையடுத்து, அதிமுகவுக்கு 122, காங்கிரஸுக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை, பேரவைத் தலைவர் ஆகியோர் தலா 1  உறுப்பினர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT